மருத்துவம்

இலவச புற்றுநோய்பரிசோதனை முகாம்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று, ஈரோடு சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை சார்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஈரோட்டில் சுதா கேன்சர் சென்டரில் நடைபெற்றது. இம்முகாமிற்கு சுதா மருத்துவமனை சேர்மேன் டாக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். இம்முகாம் வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் என இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சுகேஷ்வரன் தெரிவித்தார்.இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் செய்திருந்தார்.