ஈரோடு சம்பத்நகரில் இயங்கி வரும் ஹார்மோரா சர்க்கரை, தைராய்டு, உடற்பருமன் சிகிச்சை மையத்தின் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் RANM மாலதி விஜயகுமார் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்க்கு மருத்துவமனை இயக்குநர்கள் டாக்டர்.விஜயகுமார், டாக்டர்.மாலதி விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கி முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இம்முகாமில் ரூ.1500/- மதிப்புள்ள இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. இம்முகாமில் சர்க்கரை, தைராய்டு, உடற்பருமன் சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர்.பிரியதர்ஷினி.R மற்றும் சிறுநீரக சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர்.V.நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் வழங்கினர்.
ஹார்மோரா சர்க்கரை, தைராய்டு, உடற்பருமன் சிகிச்சை மையத்தின் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம்
Shares: