நம்மூர்

சக்தி மசாலா நிறுவனத்திற்கு விருது

மும்பையில் உள்ள நியாயமான வணிக நடைமுறைகள் கவுன்சில் (CFBP) அமைப்பு நடத்திய தேசிய விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில், தேசிய அளவில் நியாயமான வணிக நடைமுறைகளை கடைப்பிடித்தமைக்காக, தயாரிப்பு நிறுவனங்கள் – பெரிய தொழிற்சாலை பிரிவு என்ற வகையில், சக்தி மசாலா நிறுவனத்திற்கு 2024-25ஆம் ஆண்டுக்கான ஜம்னலால் பஜாஜ் தேசிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை,டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் ரவிகாந்த், வழங்கினார். இவ்விருதை சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில்,
சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி, சாந்தி துரைசாமி மற்றும் செல்வன் செங்கதிர்வேலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.