நம்மூர்

ஈரோட்டில், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில், கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.முன்னதாக இப்பேரணியை, ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையாளருமான ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.