ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா , சம்பத் நகரில் உள்ள அம்மன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு இன்று காலை 6.50 மணிக்கு வந்து வரிசையில் நின்று காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்