மருத்துவம்

சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்

உலகசர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டுசர்க்கரை நோய் கண்டறிதல் முகாம், விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் விழிப்பு ணர்வு துண்டறிக்கை வெளியிடும் நிகழ்வு ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு இதயம் நற்பணி இயக்கம், மோனிகா டயபடிஸ் சென்டர், வை அர்த்தனாரி முதலியார் அற நிறுவனம்- குகஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் சேவை மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த முகாமை நடத்தின. இம்முகாமிற்கு
பாரதி வித்யாபவன் பள்ளித் தாளாளர் டாக்டர் எல்.எம்.ராம கிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் ஈ.தங்கவேலு முன் னிலை வகித்தார். ஐஎம்ஏ ஈரோடு கிளை செயலாளர் கே.அரவிந்த் முகாமை தொடங்கிவைத்தார். ஈரோடு இதயம் நற்பணி இயக்க தலைவர் எஸ்.வி.மகாதேவன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க ஈரோடு கிளை தலைவர் டாக்டர் டி.சரவணன் விழிப்புணர்வு துண் டறிக்கையை வெளியிட, அதனை எஸ்.வி.மகாதேவன் பெற்றுக்கொண்டு பொதுமக்க ளுக்கு விநியோகம் செய்தார். முகாமில் மூத்த மருத்துவர் ஜி.நாக ராஜன், மாநகராட்சி கவுன்சிலர் ஜெயந்தி ராமசந்திரன், இதயம் நற் பணி இயக்க பொறுப்பாளர்கள் பி.ரவீந்திரன், ஏஆர்.ராம்குமார், எல்.சரவணன், எஸ்.மோகன், ஜி. சிவசண்முகம், உஷா மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சர்க்கரை நோய் விழிப்புணர்வு மனித சங்கிலியில் ஈரோடு இதயம் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மருத்துவர்கள், மருத்துவ பிரதிநிதிகள், தன்வந்திரி செவிலியர் கல்லூரி பயிற்சி செவிலியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்