மருத்துவம்

கனரக வாகன ஓட்டுநர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

ஈரோடு கனரக வாகன ஓட்டுனர்களுக்கான இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்தது. கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு, வாசன் கண் மருத்துவமனை ,கலா டெண்டல், துளசி பார்மசி ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த மருத்துவ முகாமில் கனரக வாகன ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொண்டு இலவசமாக பரிசோதனை செய்து கொண்டனர். ரத்த அழுத்தம் ,ரத்த சர்க்கரை, நுரையீரல் செயல்பாடு கல்லீரல் செயல்பாடு பாத உணர்ச்சி, எலும்பு வலிமை, தசையின் வலிமை, மருத்துவ ஆலோசனை உடலின் ஆக்சிஜன், உடல்நிறை குறியீடு, தசையின் செயல்பாடு உடல் திரவ நிலை, புரோட்டின் அளவு ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும் என்றும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் முகாமில் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுமை நாதன் இந்த முகாமை தொடங்கி வைத்தார் இதில் ஆய்வாளர் சுரேந்திர குமார் மற்றும் மேற்கு வட்டார போக்குவரத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இந்த முகாமை ஒருங்கிணைப்பு செய்த இந்தியன் கனரக வாகன ஓட்டுனர் நல கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில செயலாளர் சி அசோக்குமார் கூறுகையில் கனரக வாகன ஓட்டுனர்கள் தொடர்ந்து கண் பரிசோதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது மூலமாக விபத்துக்களை ஏற்படாமல் தடுக்க முடியும். இதற்காக இந்தியன் கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு தொடர்ந்து கனரக வாகன ஓட்டுனர்கள் நலம் கருதியும் விபத்துயில்லா இந்தியாவை உருவாக்கவும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகிறோம். இந்தத் திட்டத்திற்கு உதவி செய்த பிரிக்கால் நிறுவனத்திற்கு கனரக வாகன ஓட்டுனர்கள் சார்பாக நன்றியும் பாராட்டுக்களும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்றார். இந்த முகாமில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.