கர்நாடகாவில் டெங்கு வேக மாக பரவி வருகிறது. இந்நி லையில் கர்நாடகாவை ஒட்டி யுள்ள ஈரோடு மாவட்டத்திலும் நோய் பரவக்கூடும் என்பதால், சுகாதார துறையினர் கண்கா ணிப்பு, நோய் தடுப்பு நடவடிக் கையை மேற்கொண்டு வருகின் றனர் .இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நான்கு பேருக்கு, டெங்கு இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு டுகிறது. அளிக்கப்ப தமிழக – கர்நாடகா எல்லை பகுதிகளான பர்கூர், தாள வாடியில், மருத்துவ முகாம் நடத்தி, அறிகுறி உள்ளவர் களை, மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுப்பி வைக் கின்றனர். இதுகுறித்து மாவட்ட சுகா தார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில், 60 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள் ளனர். டெங்குவால் உயிரிழப்பு இல்லை. பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வீட்டை சுற்றிய பகுதிகளிலும், தண்ணீர் தேங் காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். டெங்கு தடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு கர்நாடகா எல்லையில் மருத்துவ முகாம்
Shares: