நம்மூர்

காங்கிரஸ் கட்சி சார்பில்கோரிக்கை மனு

ஈரோட்டில் தந்தை பெரியார் தலைமை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை அகற்றக்கூடாது என கோரி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று (மார்ச் 26) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவரும் ஈரோடு மாமன்ற உறுப்பினருமான ஈ .பி. ரவி முன்னிலையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பின்னர், ஈரோடு மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது