தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் கிருஷ்ணம்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு ஏற்கெனவே 100 முதல் 120 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்திய நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் மேலும் உயர்த்தியுள்ளதை திரும்பபெற வேண்டும் என்றார். மேலும் திருப்பதி லட்டு விசயம் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், தமிழகத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர் போன்ற பல்வேறு பெரிய கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கூறினார். மேலும், தமிழக அமைச்சரவையில் நிலையில், செந்தில்பாலாஜிக்கு சட்ட ரீதியாக பதவி வழங்கியிருந்தாலும், தார்மீக ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் சரியா என்பதை தமிழக முதல்வர் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், இந்த பதவியின் காரணமாக செந்தில்பாலாஜியின் மீதுள்ள வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடைபெறாது என்பதால், நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த விசாரணையை வேறுமாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என கூறினார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பதில் எந்த கருத்தும் இல்லை என்றாலும், பல்வேறு மூத்த அமைச்சர்கள் இருக்கும் போது, 4 வருடங்களில் துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பதை மக்கள் கவனித்து கொண்டிருப்பதால், இது தேர்தலில் திமுக விற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பது தேர்தலின் போது திமுக விற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார்.
Shares: