ஈரோடு நந்தா பார்மஸி கல்லூரியின் 28 வது பட்டமளிப்பு விழா ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் டெல்லி மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பி. ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 150 மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.முன்னதாக, கல்லூரியின் முதல்வர் டி. சிவக்குமார் ஆண்டு அறிக்கையை வாசித்தார். இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.