நம்மூர்

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு இதயம் நற்பணி இயக்கத்தின் தலைவரும், மாவட்ட கமலஹாசன் மன்ற முன்னாள் பொறுப்பாளருமான எஸ்.வி.மகாதேவனின் 45 வருட நற்பணிகளின் புகைப்படங்கள் அடங்கிய ‘நற்பணியும் நண்பர்களும் ‘ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியீட்டு விழா ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங் வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு கண் மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். அரசன் கண் மருத்துவமனை செல்வலதா பன்னீர்செல்வம், பிரியா மோகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர். விழாவில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா பங்கேற்று, புத்தகத்தை வெளியிட அதனை, மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து, இதயம் நற்பணி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி,மோனிகா டயபடிஸ் சென்டர் டாக்டர் தங்கவேலு, ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் டாக்டர் ராமமூர்த்தி,  டாக்டர் உசேன் அலி, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுபதி,  எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் அண்டு கேக்ஸ் உரிமையாளர் மகுடீஸ்வரன்,  சிவகாசி முகுந்தன், சென்னை நாகராஜன், டாக்டர் கணபதி, சூர்யா சிவசுப்ரமணியம், சகூரா செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில், ஈரோடு இதயம் நற்பணி இயக்கத்தின் தலைவர் எஸ்.வி.மகாதேவன் நன்றியுரையாற்றுகையில், தனது நற்பணிகள் தொடரும் என குறிப்பிட்டார்.