ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நாளை(15ம் தேதி) நடைபெற உள்ளது.இதனையொட்டி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து, வழிபட்டனர். அதைத்தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கோயிலில் இருந்து பெண்கள் முளைப்பாரியை எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமானது, ராஜாஜி வீதி சாந்தாங்காடு, பாரதி தியேட்டர் சாலை, முனிசிபல் காலனி சாலை, பெரிய வலசு நால்ரோடு, திருவிக வீதி,விநாயகர் கோவில் வழியாக யாகசாலைக்கு ஊர்வலம் வந்தடைந்தது.