நம்மூர்

வடகிழக்கு பருவ மழை:ஈரோட்டில் , பாதுகாப்புவிழிப்புணர்வு ஒத்திகை

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ஈரோடு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில், வடகிழக்கு பருவ மழை காலங்களில் எதிர் நோக்கும் மழைக்கால பேரிடர்களை கையாளும் விதம், தற்காலிக மிதவை உரு வாக்கி மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் விதம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பது மற்றும் தீயணைப்பு துறையினர் பயன்படுத்தும் உபகரணங்கள், மூச்சுக் கருவி ஆகியவற்றின் செயல் விளக்கம் மற்றும் கயிறு மூலமாக மாடிகளில், கிணறுகளில் இருப்பவர்களை மீட்கும் முறை, சி.பி.ஆர். மூலம் முதலுதவி சிகிச்சை உள்ளிட்டவை குறித்து காட் சிப்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது