சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணிகள் வடிவமைப்பாளராக பணிபுரிபவர் அப்புசாமி. இவர் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி உள்ளிட்டோரின் உருவ படத்தை கம்ப்யூட்டரில் வடிவமைத்து அதனை போர்வையாக உற்பத்தி செய்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது, கன்னியாகுமரியில் 133அடி உயர திருவள்ளுவர் திருவுருவ சிலை நிறுவி 25 வருடங்கள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவரின் திருவுருவப்படத்தை கம்ப்யூட்டரில் தத்ரூபமாக வடிவமைத்து அதனை போர்வையாக உருவாக்கியுள்ளார் அப்புசாமி. காட்டன் நூல் மூலம் 28 அங்குல அகலம் மற்றும் 77 அங்குல நீளத்தில் இந்த போர்வையை தயார் செய்துள்ளார். இப்போர்வை சுமார் அரை கிலோ எடை கொண்டதாகும். திருவள்ளுவர் திருவுருவப் படம் கொண்ட இந்த போர்வையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிக்க , தான் ஆவலாக உள்ளதாக அப்புசாமி தெரிவித்தார்.
திருவள்ளுவர் திருவுருவப் படத்துடன் போர்வை: வடிவமைப்பாளரின் கைவண்ணம்
Shares: