தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 6ம் தேதி நடைபெற்றது கிராம உதவியாளர்களை இரவுக்காவல் பணி,ரெக்கார்ட் அறை, மக்களுடன் முதல்வர் மனுக்களை கணினியில் முடிவு செய்வது, டிஜிட்டல் கிராப் சர்வே கணினியில் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகளுக்கு கிராம உதவியாளர்களை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து கடந்த 11ஆம் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டு கிராம உதவியாளர்களாக பணி செய்யக்கூடியவர்களை பல்வேறு வேலைக்கு பணி அமர்த்துவது மற்றும் பணிக்கு வராத ஒரு கிராம உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ..
ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக முன்பு கிராம உதவியாளர்களை கொத்தடிமைகளாக நடத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்..
Shares: