ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக சிரஞ்சுகள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர் வாடிக்கையாக உள்ள நிலையில் விற்பனையில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாராயண வலசு இந்திரா நகர் மற்றும் பெரிய சேமூர் கல்லன்கரடு ஆகிய இரு பகுதிகளில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இரு இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் இளைஞர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி திரிந்தனர்.அவர்களை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்களிடம் உடல் வலிக்காக பயன்படுத்தக் கூடிய டெபெண்டால் மாத்திரையை போதைக்காக சிரஞ்சுகள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஈரோட்டை சேர்ந்த நவீன்குமார்(21), கௌதம்(22),சிதம்பரம்(27),பாஸ்கர்(28) மற்றும் ஹரிஸ்(22),விக்னேஷ் உள்ளிட்ட 6 இளைஞர்கள் மற்றும் இந்துமதி(20),சந்தியா(23), சமீம்பானு(20) மூன்று பெண்கள் என 9 பேரை இரு வழக்குகளின் கீழ் கைது செய்த போலீசார் அவர்களிடம் விற்பனைக்காக வைத்து இருந்த 40 வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 20 ஊசிகளையும் வடக்கு காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு நபர்களை தேடி வருகின்றனர்..