நம்மூர்

தந்தை பெரியார் சிலைக்குமாலை அணிவித்துமரியாதை செலுத்தினார்அமைச்சர் முத்துசாமி

தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று ஈரோட்டில், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமியின் முகாம் அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் சு. முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஈரோடு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கே. இ. பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வி .செல்வராஜ் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.