ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடம்பூரை அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள தோட்டத்தில் கடமான் ஒன்று முள்கம்பி வேலியில் கிடப்பதை பார்த்தனர். டார்ச் லைட் அடித்து அருகில் சென்று பார்த்த போது, முள்கம்பி வேலியின் அடியில் சுருக்கு வைக்கப்பட்டுள்ளதையும், சுருக்கு கம்பியில் பெண் கடமான் ஒன்று மாட்டி இறந்து கிடந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அதே பகுதியில், வனத்துறை பணியாளர்கள் மறைந்து கண்காணித்து வந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர், சுருக்கு கம்பியில் சிக்கி இறந்து கிடந்த கடமனை அவிழ்க்க முயன்ற போது வனத்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பொன்னையன் (வயது 50) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சத்தியமங்கலம் அருகே சுருக்கு கம்பி வைத்து கடமான் வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்
Shares: