நம்மூர்

அந்தியூர் அருகே பர்கூரில் சந்தன மரக்கட்டைகள், கஞ்சா இலைகள் மற்றும் கஞ்சா செடிகள் வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாளக்கரை சோழகர் காலனியைச் சேர்ந்தவர் தாசன் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவோயிஸ்ட் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், பர்கூர் போலீசார் தாசன் நிலத்தில் சோதனை செய்து 4 அடி, 2½ அடி மற்றும் 2 அடி என மொத்தம் 8 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து தாசனிடம் விசாரணை நடத்தினர். இதில், அவரிடம் இருந்து 3.90 கிராம் அளவுள்ள கஞ்சா இலைகளையும், 5.230 கிலோ எடை கொண்ட 5 சந்தன மரக்கட்டைகளையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தாசனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.