ஆன்மீகம்

சென்னிமலை மாரியம்மன் கோவில் பொங்கல் முன்னிட்டு கம்பத்துக்கு புனித நீர் ஊற்றும் பக்தர்கள்

சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி (புதன்கிழமை) இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.
பின்னர் 30-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் திரளான பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வருகின்றனர். மேலும் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் கோவிலை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து அன்று காலையில் சென்னிமலை, காட்டூர், அம்மாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.