நம்மூர்

சக்திதேவி அறக்கட்டளையின் மறுவாழ்வு மையத்தில் சிறப்புகுழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் நலதிட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்

சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் சக்தி சிறப்பு பள்ளிகள் மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் பயிற்சிபெறும் சிறப்புகுழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் மற்றும் நலதிட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாமரத்துப்பாளையத்தில் உள்ள சக்தி மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக உதவி இயக்குநர் ஜெகதீசன் மற்றும் முன்னாள் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுக வழங்கும் சலுகைகள் மற்றும் நலதிட்டங்கள் பற்றி எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் 150 சிறப்புக்குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்