ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கு முன், தெருநாய்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சுமார் 23 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், ஈரோடுமாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போன்றவை செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரோடு, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது : ஈரோடு மாநகராட்சியில் தினசரி 20க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவை சோலாரில் அமைந்துள்ள , நாய்கள் கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுப்பூசி மற்றும் கருத்தடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கடந்த 6 மாதத்தில், 4,730 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
ஈரோட்டில் கடந்த 6 மாதங்களில் 4730 தெருநாய்களுக்குகருத்தடை சிகிச்சை
Shares: