நம்மூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று காலை ஈரோடு பவானி ரோடு அசோகபுரத்தில் உள்ள கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீபாவளிக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்கப்பட வேண்டும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓராண்டு காலத்திற்கு மேலான தள்ளுபடி மானியத் தொகைகளை நிபந்தனை இன்றி உடனடியாக வழங்க வேண்டும். நெசவுக்கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும், தள்ளுபடி மானியத் தொகைக்கான உச்ச வரம்புகளை நீக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் நெசவாளர்களின் அடிப்படை ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த நெசவாளர்களுக்கு ஓய்வூதிய தொகையை ரூ1200-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தை கறாராக அமலாக்க வேண்டும், கைத்தறி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கான‌ மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்கனவே இருந்நதது போல மாற்றியமைத்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர்