ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில், அகற்றப்பட்ட ஜவுளி வாரச்சந்தை கடைகளை மீண்டும் அமைப்பதற்கான முதற் கட்ட பணிகள் துவங்கியுள்ளன. ஈரோடு, கனி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஜவுளி சில்லரை விற்பனை மற்றும் ஜவுளி வாரச்சந்தை கடைகள் செயல்பட்டு வந்தன. அந்த இடத்தில் ஈரோடு மாநகராட்சி சார்பில் ஜவுளி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஜவுளி வணிக வளாகம் திறக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இவ்வணிக வளாகம் கட்டுவதற்காக ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த 102 ஜவுளி வாரச்சந்தை கடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அவர்கள் வேறு இடங்களுக்கு தங்கள் கடைகளை இடமாற்றம் செய்து வியாபாரம் செய்து வந்தனர்.இதில், அவர்களால் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை என்றும், வெளியில் வாடகை அதிகம் இருப்பதாகவும் கூறி தங்களுக்கு மாநகராட்சி வணிக வளாகப் பகுதியிலேயே காலியாக உள்ள, ஏற்கனவே வரச் சந்தை கடைகள் இருந்த இடத்திலேயே மீண்டும் கடைகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அது சம்பந்தமாக, பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமியின் ஆலோசனையின் படி அங்கு மீண்டும் ஜவுளி வாரச்சந்தை கடைகள் அமைக்க முதற்கட்ட பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. அதன்படி, அப்பகுதியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த கற்கள் மற்றும் பழைய கட்டுமானங்கள் கொண்ட தரைப்பகுதியை பொக்லைன் மூலமாக சமன்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இப்பணியை முடித்து தங்களுக்கு கடைகள் அமைத்து தர வேண்டும் என வாரச்சந்தை வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்
ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில்ஜவுளி வாரச்சந்தை கடைகளை மீண்டும் அமைக்கமுதற்கட்ட பணிகள் துவக்கம்
Shares: