அரசு டவுன் பஸ் ஒன்று இன்று மாலை பயணிகளுடன் ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சென்னிமலைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் , மாலை 5.15 மணி அளவில் சென்னிமலை வெள்ளோடு ரோட்டில் சக்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தது.
அதேபோல் இந்த பஸ்சின் பின்னால் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் மாணவ, மாணவிகள் இருந்தனர்.
முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சின் டிரைவர் பயணிகளை இறக்கி விடுவதற்காக சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பஸ், அரசு பஸ்சின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் அந்த கல்லூரி பஸ்சின் முன்புற கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில், நல்லவேளையாக இரு பஸ்களிலும் இருந்த யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கல்லூரி பஸ்சின் பிரேக் பிடிக்காததால் அரசு டவுன் பஸ்சின் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
சென்னிமலையில்,இரு பஸ்கள் மோதி விபத்து
Shares: