ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. சம்பல்பூர்- ஈரோடு இடையிலான ரயில் (ரயில் எண்-08311) நாளை 11ஆம் தேதி முதல் 2025 ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமைகளில் பகல் 11: 35 மணிக்கு சம்பல்பூரில் இருந்து புறப்படும். இந்த ரயில் வியாழக்கிழமை இரவு 8:30 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையம் வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் ஈரோடு- சம்பல்பூர் ரயில் (ரயில் எண்- 08312) வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மதியம் 2:45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை இரவு 11:15 மணியளவில் சம்பல்பூரை சென்றடையும். இந்த ரயில் வரும் 13ஆம் தேதி முதல் 2025ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி வரை இயக்கப்படும். இந்த ரயிலில் 2 டயர் ஏசி, 3 டயர் ஏசி, இரண்டாம் வகுப்பு ஸ்லிப்பர் கோச், முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராளா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகலூர், பீமாவரம், ராஜமுந்திரி, சாமல்கோட், அனகபல்லெ, துவ்வாடா, பொப்பிலி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
+++
சம்பல்பூர்- ஈரோடு இடையேநாளை முதல் சிறப்பு ரயில்
Shares: