சென்னிமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப தினத்தன்று கோயிலின் ராஜகோபுரம் முன்புறம் உள்ள தீப ஸ்தம்பம் மற்றும் மார்க்கண்டேஸ்வரர் – உமையவள்ளி சன்னதி முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி இக்கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (டிச.13) அன்று மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் ராஜகோபுரம் முன்புறம் உள்ள 25 அடி உயர தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றும் வகையில் புதிதாக இரும்பு ஏணி பொருத்தும் பணி இன்று நடைபெற்றது.