சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் உண்டியல்கள் , இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு துணை ஆணையர் நந்தகுமார் தலைமையில் சென்னிமலை கோயில் செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை சரக கோவில் ஆய்வாளர் ஸ்ரீ குகன், அயல் பணி ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் , திறக்கப்பட்டு அதில் பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக 36 லட்சத்து 39 ஆயிரத்து 378 ரூபாய் பணமும், 51 கிராம் தங்கம் மற்றும் 1,095 கிராம் வெள்ளியும் பக்தர்களின் காணிக்கையாக இருந்தது. உண்டியல் காணிக்கைகள் எண்ணும் இப்பணியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் அரச்சலூர் நவரசம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்