சென்னிமலை அருகே பிடாரியூர் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது.
சென்னிமலை அருகே பிடாரியூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் கடந்த 8-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. பிறகு 15-ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர். மேலும், தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலை கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு சென்றனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு , கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பிடாரியூர் மாரியம்மன்கோயிலில் பொங்கல் விழா
Shares: