சத்தியமங்கலம் அருகே திம்மராய பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கீழ்முடுதுறையில் அமைந்துள்ள திம்மராயப் பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது. இதையொட்டி திம்மராய பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் குதிரை வாகனத்தில் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதையொட்டி மதியம் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் பக்தர்கள் மூலவர் திம்மராய பெருமாளையும், உற்சவ மூர்த்தியையும் வழிபட்டனர். பக்தர்கள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த தக்காளி, கத்தரி உள்ளிட்ட காய்கறிகளை தாசர்களுக்கு படையலிட்டனர். பின் தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறிகள் மற்றும் அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்றனர்.
“விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விளைந்த காய்கறி மற்றும் அரிசி, பருப்பு வகைகளை தாசர்களுக்கு படையல் இட்டு அவர்களிடமிருந்து சிறிது பெற்றுக்கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம் ” என பக்தர்கள் தெரிவித்தனர். புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திம்மராய பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா
Shares: