ஆன்மீகம்

வண்ண வண்ண விநாயகர் சிலைகள் : களை கட்டுது விற்பனை

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் சனிக்கிழமை (செப்.7) நாடு முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையையொட்டி வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபட பல்வேறு அளவுகளில் , வகை வகையான வடிவங்களில், வண்ணமயமாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. ஈரோட்டில் பிரப் ரோடு, கொல்லம்பாளையம், ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இச்சிலைகளை வாங்கிச் செல்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விநாயகர் சிலை வியாபாரி ஒருவர் கூறுகையில், ” களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளும், ரசாயனம் அல்லாத வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளும், அரை அடி முதல் இரண்டரை அடி வரை உயரமுள்ள விநாயகர் சிலைகளையும். விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த சிலைகள் ரூ.150 முதல் ரூ.8 ஆயிரம் வரை உள்ளது. விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்” என்று தெரிவித்தார்.