ஆன்மீகம்

சென்னிமலை முருகன் கோயில்: படிக்கட்டுப் பாதையில்கூடுதல் மின் விளக்குகள்

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்களின் வாகனங்கள் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் பெரும்பாலான பக்தர்கள் 1320 படிக்கட்டுகள் வழியாக நடந்து சென்று முருகனை தரிசித்து வருகின்றனர். பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக நடந்து செல்லும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெப்பம் காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இதனால் பக்தர்களின் நலன் கருதி படிக்கட்டுகள் மற்றும் கோயில் பிரகாரங்களில் ரூ.5 லட்சம் மதிப்பில் வெண்மை நிற கூலிங் பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. மலை கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் ஏற்கனவே 30 மின் விளக்குகள் உள்ளது. தற்போது படிக்கட்டுகள் வழியாக இரவு நேரங்களிலும் திரளான பக்தர்கள் சென்று வருவதால் பாதுகாப்பு கருதி அதிக வெளிச்சம் தரும் வகையில் மேலும் 25 மின் விளக்குகள் கூடுதலாக பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. படிக்கட்டுகள் மற்றும் கோயில் பிரகாரங்களில் வெப்பத்தை தணிக்கும் வகையில் கூலிங் பெயிண்ட் அடித்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பணிகளை கோயில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன் நின்று கவனித்து வருகின்றனர்