ஆன்மீகம்

ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோயிலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) புரட்டாசி விழாவை முன்னிட்டு அலர்மேலு மங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கு நாதஸ்வர தமிழ் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து வழிபாட்டு மன்ற நிர்வாகி சுப்புசாமி தலைமையில் திரளான பக்தர்கள் சீர்வரிசை தட்டுகள் எடுத்து நாதஸ்வர தவில் இசைக் கச்சேரியுடன் 4 ராஜ வீதிகளில் வலம் வந்து ஆதிநாராயண பெருமாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு மாப்பிள்ளை அழைப்புடன் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது