மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில்,பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதன்படி, பி.எஸ்சி. இன்ஃபர்மேஷன்சிஸ்டம்ஸ் மாணவி, எஸ்.ஸ்ரீமதி, மகளிர் கபடி போட்டியில் தங்கப்பதக்கத்தையும், பி.டெக்உணவுதொழில்நுட்ப மாணவர் பி.ராகுல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் கே.ஜி.ஸ்ரீநிகேஷ் ஆகியோர் ஆண்களுக்கான இரட்டையர் டேபிள்டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், பி.டெக்.,இரசாயனப் பொறியியல் மாணவி எஸ்.ஆர்.எவாஞ்சலின் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றனர். இவர்களை இக்கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ மற்றும் கல்லூரியின் முதல்வர் வி.பாலுசாமி ஆகியோர் பாராட்டினர்.