மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. வரும் 24ம் தேதி வரை நடக்க உள்ள இப்போட்டியில், கடந்த 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடந்த பேட்மிண்டன் ( இரட்டையர்) போட்டியில், பொதுப்பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர்கள் லோகேஷ், நவீன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதே போல், கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில், ஈரோடு மாவட்டம் கரட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சினேகா முதலிடமும், ஈரோடு வ.உ.சி பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்ற மாணவி கலைச்செல்வி 2வது இடமும் பிடித்தனர்.