விளையாட்டு

தேசிய கராத்தே போட்டியில் வெண்கலம் வென்ற ஈரோடு மாணவி

ஈரோடு வி.வி.சி.ஆர். முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவி கங்கா சுபயாத்ரா என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற 2-வது தேசிய கராத்தே போட்டியில் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். அம்மாணவிக்கு பள்ளியின் தலைவர் சண்முகவடிவேல், செயலாளர் சிவானந்தன், தாளாளர் கணேசன் மற்றும் பள்ளித் தலைமையாசிரியை கவிதா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.