மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த முறை டோக்கியோவில் நடந்தது. இம்முறை பாராலிம்பிக்ஸ் -2024 போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 169 நாடுகளில் இருந்து 4400 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் வீராங்கனைகள் எண்ணிக்கை 84, கடந்த டோக்கியோ போட்டியில் இந்த எண்ணிக்கை 54 ஆக இருந்தது.
சரி…பதக்க விஷயத்திற்கு வருவோம். இந்த பாரிஸ் பாராலிம்பிக்ஸ்க்கு முன் வரையில், இதுவரை நடந்துள்ள பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்றவர் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை டிரிஸ்சா ஸோர்ன். கடந்த 1980 முதல் 2004 வரையிலான 7 பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 41 தங்கம் உட்பட மொத்தம் 55 பதக்கங்களை வென்றார். இவருக்கு அடுத்து வருபவர், சுவிட்சர்லாந்தை சேர்ந்த வீல்சேர் அத்லெட் ஹெய்ன்ஸ் ஃபெரி. இவர் வென்றது 15 தங்கம் உட்பட 35 பதக்கங்கள்.
பாராலிம்பிக்ஸ் வரலாற்றின் ’ பதக்க மங்கை ’..!
Shares: