ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கழுதை பால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. கழுதை பால் மருத்துவ குணம் கொண்டது என்பதும் , கழுதைப் பாலை குடிப்பதால் இருமல், சளித்தொல்லை நீங்கி, ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும் என்பதும் பரவலாக மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இப்போதும், கிராமங்களில் கழுதை பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கழுதை பால் விற்பனை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீராளன், சின்னதுரை ஆகியோர். இவர்கள் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பல ஆண்டுகளாக ஊர் ஊராகச் சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்காக இவர்கள் பெரம்பலூரில் இருந்து 12 கழுதைகளுடன் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூர் பகுதியில் உள்ள வாரச்சந்தையில் தங்கியுள்ள இவர்கள் காலை முதலே கழுதை பால் விற்பனையை தொடங்குகின்றனர். ஒரு சங்கு (100 மில்லி) கழுதை பால் ரூ.400க்கும், ஒரு லிட்டர் ரூ.4 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோபி அருகே, கழுதை பால் விற்பனை வெகு ஜோர்
Shares: