விளையாட்டு

கோ-கோ போட்டி : வி.இ.டி.கல்லூரி முதலிடம்

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கோ-கோ விளையாட்டு போட்டி (டி – மண்டல ஆண்கள் பிரிவு) , ஈரோடு, திண்டலில் உள்ள விஇடி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரியில் நடைபெற்றது. இதில் 13 கல்லூரிகளில் இருந்து அணிகள் பங்கு பெற்றன. போட்டியில், வி.இ.டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி முதல் இடத்தையும், கோபி கலை அறிவியல் கல்லூரி 2-ம் இடத்தையும், காங்கேயம் அரசு கலைக் கல்லூரி 3-ம் இடத்தையும் மற்றும் மொடக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றன. இந்நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாகி பாலசுப்ரமணியம் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்