சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசில் உள்ள வனப்பகுதியில் குட்டக்காட்டுதோட்டத்தை சேர்ந்த விவசாயி குமாரசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டி அருகே நேற்று முன்தினம் மர்ம விலங்கு ஒன்று நடந்து சென்றதற்கான கால் தடம் இருந்துள்ளதாக குமாரசாமி சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மர்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ளதை ஆய்வு செய்தனர். பெரிய அளவிலான கால் தடமாக இருந்ததால் அது சிறுத்தையாக இருக்குமோ என பொதுமக்கள் அச்சப்பட்டனர். இந் நிலையில் அந்த மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து கண்டறிய குமாரசாமியின் தோட்டம் உள்ள பகுதியில் 2 தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் இனிமேல் ஏதாவது விலங்குகள் வந்தால் அது குறித்து கண்டறிய வாய்ப்பு உள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்
மர்ம விலங்கு நடமாட்டம்குறித்து கண்டறியகண்காணிப்பு கேமராக்கள்
Shares: