ஈரோடு – கரூர் செல்லும் ரோட்டில் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆரியங்காட்டுப்புதூர் ரயில்வே நுழைவு பாலத்தில் , மழை நீர் தேங்கிச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் ஈரோடு தொகுதி எம்.பி., கே.இ. பிரகாஷ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது சம்பந்தமாக அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மழை நீர் செல்லும் பாதையில் உள்ள இரண்டு குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு பதிலாக பெரிய குழாய்கள் பதித்து மழை நீர் தேங்காமல் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து , மழைநீர் வடிந்து செல்லும் ஊனாம்பள்ளம், பஞ்சலிங்கபுரம் ஆகிய பகுதிகளையும், பின்னர் சாவடிப்பாளையம் புதூரில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் மழை நீர் செல்லும் பகுதியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அவர், பஞ்சலிங்கபுரம் காவிரி ஆற்றின் கரையில் படித்துறை அமைப்பதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.