ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, வேலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் மலைபாதையில் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஒன்று இருசக்கர வாகனத்திற்கு வழி விட முயன்ற போது எதிர்பாராத விதமாக மலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சுமார் 100 அடிக்கும் மேல் உள்ள பள்ளதாக்கில் 20 அடியில் மரம் ஒன்று இருந்ததன் காரணமாக அதில் கார் சிக்கியது, தொடர்ந்து காரில் ஏழு பேர் பயணித்த நிலையில் கீழ்வானி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (24) , மற்றும் சவுண்டப்பூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (56) ஆகிய இருவரும் படுக்காயம் அடைந்தனர். (எலும்பு முறிவு) மீதமுள்ள ஐந்து பேரில் இருவர் லேசான காயங்களுடனும் நான்கு பேர் எந்த ஒரு காயங்களும் இன்றியும் உயிர் தப்பின்னர். விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மற்றும் கதிர்வேல் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர், தொடர்ந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தில் கார் சிக்கியதன்தன் காரணமாக அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.