ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஈரோடு மாநகரம் 44 வது வார்டு புதுமை காலனி மற்றும் நாடார் மேடு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அப்பகுதிகளில் கால்வாய்கள் தூர் வாரும் பணியையும் அவர் பார்வையிட்டார். ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மனிஷ், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.