ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 423 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மி.மீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதனால், மாவட்டத்தில் அணைகள், ஏரிகள் மற்றும் குளங்களுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று (11ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (12ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தமாக 423 மி.மீ மழையும், சராசரியாக 24.88 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 68.80 மி.மீ மழையும், குறைந்தபட்சமாக பெருந்துறை, சென்னிமலை மற்றும் நம்பியூரில் 5 மி.மீ மழை பதிவானது. ஈரோடு நகரில் 77 மி.மீ, மொடக்குறிச்சி 37 மி.மீ, கொடுமுடி 6 மி.மீ, பெருந்துறை 5 மி.மீ, சென்னிமலை 5 மி.மீ, பவானி 38 மி.மீ, கவுந்தப்பாடி 10 மி.மீ, அம்மாபேட்டை 58.40 மி.மீ, வரட்டுப்பள்ளம் அணை 68.80 மி.மீ, கோபிசெட்டிபாளையம் 14.20 மி.மீ, எலந்தகுட்டைமேடு 8.20 மி.மீ, கொடிவேரி அணை 15 மி.மீ, குண்டேரிப்பள்ளம் அணை 25.20 மி.மீ, நம்பியூர் 5 மி.மீ, சத்தியமங்கலம் 16 மி.மீ, பவானிசாகர் அணை 7.80 மி.மீ, தாளவாடி 26.40 மி.மீ மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில்மொத்தம் 423 மி.மீ., மழை பதிவு
Shares: