பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தகுதிகளின் அடிப்படையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ல் பாராட்டு பத்திரமும், ரூபாய்.1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 2024-25 ஆம் ஆண்டிற்கான இவ்விருது மற்றும் பரிசு தொகை வழங்கும் பொருட்டு, பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 13 வயதுக்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 24 -01-2025 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருதுக்கு தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in ) 30.09.2024 க்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இவ்விருது தொடர்பாக தேவைப்படும் விவரங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் 6 வது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்
பெண் குழந்தைகளுக்கு விருது
Shares: