தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (பிப்.24) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஈரோடு சோலாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தக திறப்பு விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மருந்துகள் விற்பனையை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் , மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.இ.பிரகாஷ் ,ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி .சி. சந்திரகுமார், அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் , துணை மேயர் வி. செல்வராஜ் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்