உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பவானி வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கிராம நிர்வாக அலுவலகம், நியாய விலைக்கடை, அங்கன்வாடி மையம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, பவானி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் வீதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், உணவு சமைக்கும் இடத்திற்கு சென்று அங்கு தயாராக இருந்த காலை உணவினை சுவைத்து பார்த்து, ஆய்வு மேற்கொண்டார் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா. அவர், பவானியில் உள்ள நகராட்சி பேருந்து நிலையத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.