கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், கல்லூரியின் இயந்திரவியல் துறை மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் புரொடக்ஷன் இன்ஜினியர்ஸ் சொசைட்டி இணைந்து நடத்திய “காற்றில் இயங்கும் கார்களின் சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்” குறித்த கருத்தரங்கு 17.10.2024 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரு. மகேஷ் பாலசுப்புரமணி,
தலைவர் – பராமரிப்பு துறை, கோரல் மேனுபெக்சரிங் ஒர்க்ஸ் ஈரோடு, அவர்கள் கலந்து கொண்டார். இக்கருத்தரங்கில் காற்றின் மூலம் இயங்கும் கார்களுக்கு பயன்படுத்தபடும் பாகங்கள் மற்றும் நவீன தொழிநுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். மேலும் இக்காலகட்டத்தில் சமுதாயத்தின் கால நிலை மாற்றத்தை பாதிக்காதவாறு இக்கார்களின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். இறுதியாக, பின்வரும் காலங்களில் இக்கார்களில் பயன்படுத்த படும் பாகங்கள் சார்ந்த திட்ட அய்வு செய்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினார். இக்கருத்தரங்கில் துறை சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் சுமார் 120 மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக இக்கருத்தரங்கில் இயந்திரவியல் துறையின் பேராசிரியர் திரு. பி.லிங்கேஸ்வரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.மேலும் இக்கருத்தரங்கில் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர் எஸ். கார்த்திகேயன் அவர்கள் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை பேராசிரியர் திரு. த. மோகன்ராஜ் செய்திருந்தார் மற்றும் விழாவின் நிறைவாக நன்றியுரை வழங்கினார்
“காற்றில் இயங்கும் கார்களின் சவால்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்” குறித்த கருத்தரங்கு
Shares: