கல்வி

இரத்ததான முகாம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 10.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இம்முகாமில் சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு 65 யூனிட் இரத்தம் தானமாக வழங்கினர். இம்முகாமின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. க. கெளதம், அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மேலும் இரத்ததானம் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார். இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், ஈரோடு, அரசு மருத்துவமனை, இரத்தவங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சசிகலா மற்றும் சிறுவலூர், ஆரம்ப சுகாதார ஆய்வாளர் திரு சுகந்த் ஆகியோர் கலந்துகொண்டு இம்முகாமை சிறப்பித்தனர்.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. ரா.மதன்குமார் செய்திருந்தார்.